» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ரஜினிகாந்த் அதிமுக தலைமையேற்க ஒருபோதும் இடம் தர மாட்டோம்: செல்லூர் ராஜூ திட்டவட்டம்

ஞாயிறு 5, ஆகஸ்ட் 2018 8:37:19 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவுக்கு தலைமையேற்க வந்தால் அதற்கு ஒருபோதும் இடம் தர மாட்டோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ரஜினியை அதிமுக தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.இது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அதிமுகவிற்கு ரஜினி தலைமையேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

யார் வேண்டுமாலும் அதிமுகவில் இணையலாம். அதேசமயம், தொண்டனாக இணைந்து, பின்னர் படிப்படியாக முன்னேறி வந்துதான் தலைமை பொறுப்புக்கு வரமுடியும் என்றும் அமைச்சர் கூறினார். நேரடியாக கட்சியின் தலைமை பொறுப்புதான் வேண்டும் என்று ரஜினி வேண்டுகோள் வைத்தால் கட்சி தலைமை அதனை ஒருபோதும் ஏற்காது என்று கூறிய செல்லூர் ராஜூ, ரஜினி மட்டுமில்லை, அது கமலாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, கட்சியில் தொண்டராக சேர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கு தொண்டாற்றினால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைய முடியும். இதுதான் கட்சியின் நிலைப்பாடும். எனவே கட்சியில் சேர்ந்தவுடனே தலைமை பொறுப்பு என்பது கிடைக்காது என்று உறுதிபட தெரிவித்தார்.


மக்கள் கருத்து

பொதுமக்கள், தூத்துக்குடிAug 10, 2018 - 05:25:01 PM | Posted IP 162.1*****

ஏண்டா நீங்கெல்லாம் லூசாடா?

உண்மைAug 5, 2018 - 09:20:12 PM | Posted IP 162.1*****

ரஜினிகாந்த்துக்கு வாய்ப்பு கொடுக்காதீங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Anbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam


CSC Computer Education


Joseph Marketing



Thoothukudi Business Directory