» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தில் மது இல்லாத நிலை ஏற்பட பாஜக ஆட்சி மலரவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

திங்கள் 23, ஜூலை 2018 9:04:00 AM (IST)

தமிழகத்தில் மது இல்லாத நிலை ஏற்பட பாஜக ஆட்சி மலரவேண்டும். என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதுரை யானைமலை ஒத்தக்கடையில் பாஜக மாநில மகளிரணி சார்பில் மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் அவர் ஆற்றிய வாழ்த்துரை: தமிழகத்தில் பாஜக ஆட்சி வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும், பிரதமர் மோடி பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.  பெண்களை  தெய்வமாக போற்றும் நமது நாட்டில் அவர்களின் முன்னேற்றத்துக்கும், பாதுகாப்புக்கும் பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ள திட்டங்கள் அளப்பரியது.

தமிழகத்தில் மதுபானக் கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. அந்த வருவாய் ஏழை மக்களின் வீட்டுக்குச் செல்லவேண்டிய பணமாகும். ஆகவே தமிழகம் மது இல்லாத மாநிலமாக பாஜக ஆட்சி மலருவது அவசியம். திராவிடக் கட்சிகள் மதுக்கடைகளை அடைக்கத் தயாராக இல்லை. மதுவுக்கு அடிமையான தலைமுறையை திராவிடக் கட்சிகள் உருவாக்கிவிட்டன. தமிழகத்தில் மது இல்லாத நிலை ஏற்பட பாஜக ஆட்சி மலரவேண்டும். அதன்படி தமிழகம் காக்கப்படவேண்டும். வருங்காலத்தில் தமிழகம் வளர்ச்சி அடையவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகவும் பாஜக ஆட்சி மலரவேண்டும் என்றார். 


மக்கள் கருத்து

ஒருவன்Jul 23, 2018 - 10:35:58 AM | Posted IP 162.1*****

அதுவும் சுத்த பொய் ..

ManithanJul 23, 2018 - 09:52:20 AM | Posted IP 172.6*****

Iravinil attam pagalile kuttam ithuthan engal ulagam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Joseph Marketing

Nalam Pasumaiyagam
CSC Computer Education

Black Forest Cakes

New Shape TailorsThoothukudi Business Directory