» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சமூகவலைதளங்களில் ஸ்டாலினை விமர்சிக்க கூடாது: மதிமுக தொண்டர்களுக்கு வைகோ வேண்டுகோள்!

ஞாயிறு 15, ஜூலை 2018 8:33:16 PM (IST)

சமூகவலைதளங்களில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க கூடாது என மதிமுக தொண்டர்களுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது தொண்டர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் செய்தியில், திமுக குறித்தோ, அதன் செயல் தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆருயிர் சகோதரர் மு.க.ஸ்டாலின் குறித்தோ முகநூலிலோ, இணையதளத்திலோ, வாட்ஸ் அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த விமர்சனமும் செய்யக்கூடாது.

அப்படி விமர்சனம் செய்பவர்கள் மதிமுக நலனுக்குப் பெருங்கேடு செய்பவர்கள் ஆவார்கள். இதனை மீறிச் செயல்படுகின்றவர்கள் மதிமுகவினராகவோ, ஆதரவாளர்களாகவோ, பற்றாளர்களாகவோ கருதப்பட மாட்டார்கள். மதிமுகவுக்கும் அவர்களுக்கும் எள் அளவு தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Joseph Marketing

New Shape Tailors


crescentopticals




Thoothukudi Business Directory