» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜெயலலிதா குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியது உளறல் அல்ல... உண்மை: ராமதாஸ் கருத்து

செவ்வாய் 19, ஜூன் 2018 5:27:12 PM (IST)

"ஜெயலலிதா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது உளறல் அல்ல உண்மை" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அதிமுக சார்பில் காவிரி மீட்பு போராட்டம் வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடி விட்டார். ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் திருடி 18 எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் இப்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சை கேட்டு மேடையில் இருந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதை தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ள ராமதாஸ், அது குறித்து தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.

அதாவது, "ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை சசிகலா தரப்பு சுருட்டிக் கொண்டது: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - இது உளறல் அல்ல. உண்மை. நீண்டநாட்களாக மனதுக்குள் மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் இப்படித் தான் உண்மையாக வெளிவரும்!" என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதேபோல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர். ஜெயலலிதா குறித்து அக்கட்சியை சேர்ந்த அமைச்சரின் பேச்சு தமிழக அரசியலில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது.


மக்கள் கருத்து

சாமிJun 19, 2018 - 05:34:28 PM | Posted IP 162.1*****

அன்புமணி கொள்ளை அடித்தது ஏராளம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


Thoothukudi Business Directory