» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கர்நாடகாவில் ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல்

வெள்ளி 18, மே 2018 4:22:36 PM (IST)

ரிசார்ட் மேனேஜர்கள் தங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பதால், தங்களை ஆட்சியமைக்கக் கோரியுள்ளனர் என நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டலாக கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தில் பாஜக.வை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். துணிச்சலாக தனது கருத்துகளைக் கூறிவந்தார். பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆளுநர் காங்கிரஸ், மஜத கூட்டணியை அழைக்காமல் பாஜகவை அழைத்து ஆட்சியமைக்கக் கேட்டுக்கொண்டது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இதை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக கண்டித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் நடக்கும் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் எம்.எல்.ஏக்கள் எங்கு தாவினார்கள், எம்.எல்.ஏக்கள் எங்கு தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பன போன்ற செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. அரசியல் சாணக்கியத்தனங்களை கண்டுகளியுங்கள்.

அரசியல்வாதிகளின் விளையாட்டில் நமது இறுதித் தீர்ப்பு அரசியலுக்காக எப்படியெல்லாம் மாற்றப்படுகிறது, நமது நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பன போன்றவற்றையெல்லாம் இப்போது கூட நாம் உணரவில்லை என்றால் மீண்டும் தோற்றுப்போவோம்.

கர்நாடக மக்களுக்கு ஒரு ப்ரேக்கிங் நியூஸ் ரிசார்ட் மேனேஜர்கள் ஆளுநரை சந்தித்து தங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பதால், தங்களை ஆட்சியமைக்கக் கோரியுள்ளனர். அரசியல் விளையாட்டு ஆரம்பமாகி விட்டது. அரசியல் விளையாட்டில் அனைவரும் ரிசார்ட் அரசியலில் குதித்துவிட்டார்கள் என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

சாமிமே 20, 2018 - 08:01:33 AM | Posted IP 162.1*****

ஒருநாள் இந்த நாய் செருப்படி படும்

Prakash raj rocksமே 19, 2018 - 04:47:45 PM | Posted IP 162.1*****

prakash raj sonna mathi BJP atchi amaikala.. satharana oru nadiganukku ithana thiramaya su samy ya S---pa vacha aluya ninu... adra adra adra.. ini BJP ku marana adi ella state layum arambikum...

தமிழன்மே 19, 2018 - 10:57:31 AM | Posted IP 162.1*****

எப்பா பிரகாஷ்ராஜ் பாரதியஜனதா கட்சி ஐம்பது சீட்டுக்கு மேல் வங்காதுனு சொன்ன? இப்ப என்னாச்சி? உன் மதவெறி சுயரூபம் வெளிப்பட்டு ரொம்பநாள் ஆயிடுச்சு கண்ணா ......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors
Thoothukudi Business Directory