» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்துக்கு விரைவில் நல்ல நேரம் பிறக்கும்: நடிகர் ரஜினி காந்த் பேச்சு

புதன் 9, மே 2018 11:04:03 PM (IST)

தமிழகத்துக்கு விரைவில் நல்ல நேரம் பிறக்கும் என காலா இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி காந்த் பேசினார்.

காலா பட இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: இந்த  விழா  இசை வெளியீட்டு விழா போலில்லாமல் காலா படத்தின் வெற்றி விழா போல் தெரிகிறது. காலா அரசியல் படம் இல்லை. ஆனால்  படத்தில் அரசியல் இருக்கிறது. 

தமிழகத்துக்கு விரைவில் நல்ல நேரம் பிறக்கும். தென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்நாள் கனவு. சிவாஜி வெற்றி விழாவில் பேசிய கருணாநிதியின் குரலை மறக்க முடியாது; 75 ஆண்டுகளாக தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் கருணாநிதியின் குரலை கேட்க ஆர்வமாக  காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்; கருணாநிதி விரைவில் குணமடைவார். வாழ்க்கையில் புத்திசாலியுடன் பழகலாம் ஆனால் அதிபுத்திசாலியுடன் பழகக்கூடாது  மேலும் நல்லவனாக இருக்கலாம் மிகவும் நல்லவனாக இருக்கக்கூடாது.

யார் என்ன சொன்னாலும் எனது பாதையில் பயணம் தொடரும். லிங்கா படத்திற்கு பிறகுதான் வயதிற்கு தகுந்த கதாபாத்திரங்கள் மற்றும் வயதிற்கு ஏற்ற கதாநாயகிகளுடன் நடிக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.  ஏவிஎம், ஜெமினி போன்ற பாரம்பரியமிக்க சினிமா தயாரிப்பு நிறுவனம் சினிமா தயாரிப்பை கைவிட்ட நிலையில் தயாரிப்பாளர் தாணு தனது கடும் உழைப்பினால் வெற்றி பெறுகிறார் அவருக்கு எனது பாராட்டுகள். லிங்கா படம் சரியாக போகாததால் லிங்காதான் எனது கடைசி படம் என்று சிலர் கூறினர். கடந்த  40 ஆண்டுகளாக நான் நடித்து முடித்து விடுவேன் என  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் மக்களும், கடவுளும் என்னை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ரசிகன்மே 12, 2018 - 02:16:15 PM | Posted IP 141.1*****

என்ன தலைவா நீங்க இமயமலை போறீங்களா?

ஆமா டாமே 10, 2018 - 08:27:16 PM | Posted IP 141.1*****

நியூட்ரினோ , காவேரி , ஸ்டெர்லைட், நீட் ....... போன்ற போராட்டம் வந்தால் பேசக்கூடாதாம்... சினிமாவுல மட்டும் பேசுவாராம் ..

kuguniமே 10, 2018 - 11:05:03 AM | Posted IP 162.1*****

அட போடா சொட்டை தலையா.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications
Black Forest Cakes

Nalam Pasumaiyagam

New Shape Tailors

CSC Computer Education

Joseph MarketingThoothukudi Business Directory