» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கச்சா எண்ணை விலை குறைந்தும், பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்வு : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

திங்கள் 30, ஏப்ரல் 2018 12:42:44 PM (IST)

கச்சா எண்ணை விலை குறைந்து வரும் நிலையில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில், கச்சா எண்ணை விலை குறைகிறது, ஆனால் மக்களுக்கு வரிச்சுமை கூடுகிறது இன்று பெட்ரோல், டீசல் எந்தக் காலத்திலும் இல்லாத விலைக்கு விற்கின்றன!

ரூ 6 லட்சம் கோடியில் ஒரு பகுதியை நிவாரணமாக மக்களுக்குத் தந்திருக்க வேண்டுமா இல்லையா?  பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. ஆனால் மக்களுக்கு கொஞ்சம் கூட நிவாரணம் அளிக்கப்படவில்லை. நான்கு ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்ட கூடுதல் வரிச்சுமை ரூ 6 லட்சம் கோடி என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

to சாமிமே 3, 2018 - 05:57:43 PM | Posted IP 141.1*****

உன் சொல்லை பார்த்தாலே தெரியுது bakthal ஆதரவலான் என்று. நீ சோப்புல பண்ணாம கொள்ளையடிச்சு வச்சிருப்பா, உனக்கு எது விலை ஏறினாலும் கவலை இல்ல..

சாமிமே 2, 2018 - 09:43:09 PM | Posted IP 141.1*****

முழிய பாத்தாலே தெரியுது - முழு திருடன் என்று

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

New Shape Tailors

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals







Thoothukudi Business Directory