» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நான் கட்சி தொடங்குவது உறுதி : ரஜினிகாந்த் பேட்டி

திங்கள் 23, ஏப்ரல் 2018 8:10:12 PM (IST)

நான் கட்சி தொடங்குவது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார். இதில் அவர் தற்போதைய பல பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தார் அவர் கூறியதாவது: 

நான் கட்சி தொடங்குவது உறுதி. அதற்கான தேதி எப்போது என்று பின்னர் அறிவிக்கப்படும் என்றார். ஐபிஎல் போட்டியின் போது காவலர்கள் தாக்குதல் குறித்த கேள்விக்கு காவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது என்றார். அரசியலில் விமர்சனம் என்பதை தவிர்க்க முடியாது என்றார்.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து பேசிய அவர் குற்றம் நிரூபணமானால், பேராசிரியை நிர்மலா தேவிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றார் .மேலும் பத்திரிகையாளர்கள் குறித்த நடிகர் எஸ்வி சேகரின் முகநுால் பதிவுக்கு நடிகர் எஸ்.வி.சேகரின் சர்ச்சை கருத்து மன்னிக்க முடியாத குற்றம்.பத்திரிகையாளர்களை அவ்வாறு அவர் பேசியிருக்க கூடாது என்றார்.


மக்கள் கருத்து

அருண்தன்வந்த்Apr 28, 2018 - 09:54:41 AM | Posted IP 141.0*****

கட்சி தொடங்க தேர்வான இடம் அமெரிக்காவா அல்லது இமயமலையிலா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape TailorsJoseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

Thoothukudi Business Directory