» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த தடையில்லை: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 20, ஏப்ரல் 2018 4:24:20 PM (IST)

தமிழக கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகளில் உயர்நீதிமன்றம் தலையிட்டு தடை விதிக்க முடியாது என்று கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி அளித்தது. தேர்தல் நடத்த அனுமதி அளித்த போதிலும், தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது எனவும், தேர்தலை நடத்தி விட்டு மே 3 ஆம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals

CSC Computer Education



Thoothukudi Business Directory