» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நான் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி அல்ல: பாஜக பெண் பிரமுகர் குமுறல்!!

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:06:40 PM (IST)

சமூக வலைத்தளத்தில், பாஜகவை சேர்ந்த ஜெஸ்ஸி முரளிதரனை தவறாக சித்தரித்து, பாலியல் பேராசிரியை நிர்மலாதேவி என பரப்பி வருவதாக பாஜக ஊடக பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.

பாலியல் விவகாரம் பற்றி கல்லூரி மாணவிகளிடம் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி படத்தை, பாஜக நிர்வாகி ஒருவர் படம் என்று மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருகிறார்கள். இதுகுறித்து தமிழக ஊடக பிரிவு, தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை: இவர் பெயர் ஜெஸ்ஸி முரளிதரன். தமிழக பாஜக வைச் சேர்ந்தவர். இவரது புகைப்படத்தை, தவறாக சித்தரித்து, இவர்தான் பாலியல் பேராசிரியை நிர்மலாதேவி என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்!

அனைவரும் பகிர்ந்து இந்த பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க உதவுங்கள். அராஜக தீய சக்திகள் முழுமையாக அழிக்கப்பட வேண்டியவை என்பதில் இனி யாருக்கும் சந்தேகம் இருக்காது. இது தொடர்பாக காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் இலாக்காகளில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை இல்லை எனில் தீவிர போராட்டத்திற்கு தயாராவோம்! இவ்வாறு, ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜெஸ்ஸி முரளிதரன் பேசிய வீடியோவையும், பாஜக ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது. 

அதில் அவர் கூறியுள்ளதாவது: நான் நிர்மலா தேவி கிடையாது. ஜெஸ்சி முரளிதரன். நான் பாஜக கட்சியில் 5 வருடங்களாக உள்ளேன். திமுகவில் உள்ளவர்களுக்கு கூட என்னை தெரியும். எதற்காக இப்படி செய்கிறீர்கள், உங்கள் வீட்டு பெண்களை இப்படி செய்வீர்களா, சோஷியல் மீடியாவில் எடுத்து போட்டவன் ஆம்பிளையா? அவர்கள் வீட்டில் உள்ள அம்மா, அக்கா, தங்கச்சி, மனைவி போட்டோவை எடுத்து போடலாமே. எனது போட்டோவை ஏன் போடுகிறாய்? எனக்கு நியாயம் கிடைக்கனும். இதற்காக எந்த எல்லைக்கும் போவேன். எங்களுக்கு நீங்கள்தான் விளம்பர பலகை, நீங்கள் செய்து கொண்டே இருந்தாலும், நாங்கள் அச்சப்பட மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

New Shape Tailors

Joseph MarketingThoothukudi Business Directory