» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அவர்கள் கருப்புக்கொடி காட்டினால், நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம்: ராஜேந்திர பாலாஜி

திங்கள் 9, ஏப்ரல் 2018 4:40:29 PM (IST)

பிரதமருக்கு எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடி காட்டினால், நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

நான்கு மாநிலங்கள் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைக் காலக்கெடு முடிந்தும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி தொடங்கவுள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரது வருகையை ஒட்டி, சென்னை, விமான நிலையம், மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோடி வருகையின் போது, கருப்புக் கொடி காட்டப்படும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவோம். காவிரி நீரை பெற பிரதமருக்கு உரிய அழுத்தம் கொடுப்போம்" என கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

தமிழன்Apr 10, 2018 - 11:22:52 AM | Posted IP 162.1*****

பச்சை ...... பச்சை கொடி காட்டுங்கள்

மனிதன்Apr 9, 2018 - 05:26:04 PM | Posted IP 172.6*****

எப்பா அதிமுக கட்சி தலைவர் டெல்லில இருந்து வருகிறார் அதனால் நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் ....அதிமுக கட்சியை டெல்லி தலைவரிடம் அடமானம் வைத்து ஒரு வருடம் முடிந்து விட்டது .....( ஒரு கருப்பு கொடி காட்டினாலும் ஒரு நாட்டின் பிரதமருக்கு அவமானம் என்பது உங்களை போன்ற அமைச்சர்களுக்கு எப்படி தெரியாமல் போனது )

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals



Joseph Marketing





Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors



Thoothukudi Business Directory