» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

துணைவேந்தர் பதவிக்குமா தமிழருக்கு தகுதியில்லை? கவிஞர் வைரமுத்து கேள்வி

வெள்ளி 6, ஏப்ரல் 2018 5:34:00 PM (IST)

பிரதமர் பதவிக்குத்தான் தமிழருக்கு வாய்ப்பில்லை, துணைவேந்தர் பதவிக்குமா தமிழருக்கு தகுதியில்லை என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பி உள்ளார். 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2 வருடங்களாக காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. இதற்காக துணைவேந்தர் தேடுதல் குழு நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. துணைவேந்தராக நியமிக்கக்கோரி விண்ணப்பித்த 170 பேரில் 8 பேரை தேர்ந்தெடுத்து தேடுதல் குழு நேர்முகத்தேர்வு நடத்தியது.

அந்த 8 பேரில் பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் எச்.தேவராஜன், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன மெட்டீரியல் எனர்ஜி துறை கவுரவ பேராசிரியர் எம்.கே.சூரப்பா, சென்னை ஐ.ஐ.டி.யின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.பொன்னுசாமி ஆகிய 3 பேர் பெயரை பட்டியலிட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் தேடுதல் குழு ஒப்படைத்தது. அந்த 3 பேரிடமும் நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேர்காணல் நடத்தினார்.

இந்தநிலையில் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.இந்தவிவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து வைரமுத்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான் ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை. துணைவேந்தர் பதவிக்குமா ஒரு தமிழருக்குத் தகுதியில்லை?  மத்திய அரசின்  இதுபோன்ற செயல்களெல்லாம் தமிழகத்தைத் தனிமைப்படுத்தவா?  தனிப்படுத்தவா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான்
ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை. 
துணைவேந்தர் பதவிக்குமா
ஒரு தமிழருக்குத் தகுதியில்லை? 
இதுபோன்ற செயல்களெல்லாம்
தமிழகத்தைத்
தனிமைப்படுத்தவா? 
தனிப்படுத்தவா?

— வைரமுத்து 


மக்கள் கருத்து

indianApr 8, 2018 - 04:15:46 PM | Posted IP 141.1*****

Yes. Tamil people dont have any qualification for any leadership qualities. Try to learn from Kerala. Tamils are fools, so only they run behind the actors / actress catching their heavy ......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing

New Shape Tailors

crescentopticalsThoothukudi Business Directory