» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மின்வாரிய தொழிலார்களின் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை : வைகோ வலியுறுத்தல்

செவ்வாய் 6, பிப்ரவரி 2018 10:39:00 AM (IST)

மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டுமென  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் சிரமம் இன்றி தொடந்து மின் சேவையைப் பெற்றுத் தங்களது அன்றாடப் பணிகளைச் மேற்கொள்வதற்காக மின் வாரியத் தொழிலாளர்கள், அலைந்து திரிந்து பணி ஆற்றுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். சுனாமி, சூறாவளி பாதிப்பின் போதும், சமீபத்தில் குமரி மாவட்டத்தை சின்னாபின்னமாக்கிய ஓகி புயலின் போதும் இருளில் மூழ்கிய மக்களுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளாகவே வெளிச்சம் கிடைக்க இரவு பகல் பாராது அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தங்களது உயிரைப் பணயம் வைத்து ஆற்றிய பணியை நாடே பாராட்டியது.

மின்வாரிய தொழிலாளர்களுக்கான 11 ஆவது புதிய ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிற நிலையில், கடந்த 31.01.2017 அன்று மின்துறை அமைச்சர், "வேலைப்பளு காரணமாக தொழிற்சங்கங்களுடன் பேசி முடிப்பதற்கு சிறிது காலம் ஆகும்.

எனவே, இடைக்கால நிவாரணமாக தொழிலாளர்களுக்கு 2500 ரூபாயும், ஓய்வு பெற்றவர்களுக்கு 1250 ரூபாயும் நான்கு மாதங்களுக்கான இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சங்கங்களிடம் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொள்ளாத சங்கங்கள், 12 ஆம் தேதிக்குள் உடன்பாடு ஏற்படாவிடில் பிப்ரவரி 16 தேதி அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளன.

ஏற்கனவே அரசுப்போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 2.57 காரணியைக் கொண்டு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டுமென்ற தங்களது கோரிக்கையை ஏற்காமல், 2.44 வழங்கிட அரசு உறுதியாக இருந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் ஏற்பட்ட சங்கடங்கள் அனைவரும் அறிந்ததே! எனவே தமிழக அரசு, 2.57 காரணியைக் கொண்டு தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்கிற தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, மின் வாரியத்தில் இயங்கி வரும் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் உடனடியாக அழைத்து சுமூகத் தீர்வு காண வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads





Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

New Shape Tailors


crescentopticals



Thoothukudi Business Directory