» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அதிமுக தொண்டர்கள் தினகரன் பக்கம்தான் உள்ளனர் : சசிகலாபுஷ்பா எம்.பி. சொல்கிறார்!!

திங்கள் 29, ஜனவரி 2018 5:33:38 PM (IST)

தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் தினகரன் பக்கம்தான் உள்ளனர் என்று சசிகலா புஷ்பா எம்.பி. கூறினார். 

தினகரன் அணியை சேர்ந்த சசிகலா புஷ்பா எம்.பி. மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு முதல்வர் விளக்கம் அளித்துள்ளார், போக்குவரத்து கடனை தீர்க்க ஆட்சியாளர்கள் மக்களிடம் பணம் வாங்கித்தான் சரிசெய்ய வேண்டுமா? வேறு வழிகளில் சரி செய்ய, ஆலோசனை கூற அறிவார்ந்த அமைச்சர்கள் இல்லையா? ரூ.10 கோடி கடனை தீர்க்க மக்கள் படும் கஷ்டம் என்ன என்பதை ஆராய்ச்சி செய்து பார்ப்பது தான் அறிவார்ந்த அரசியல். 

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கைது நடவடிக்கை எடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. தினகரன் அணியினரின் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தடை ஏற்படுத்துவது அராஜக அரசியல் ஆகும். எம்.ஜி. ஆரின் பெயரை சொல்லி இட்டை இலை சின்னம் வைத்திருந்தால் மட்டும் தகுதி ஆகிவிடாது. எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவிற்கு எதிர்க்கட்சி போன்று சுவர் விளம்பரம் செய்ய தடை ஏற்படுத்துவது, எதிரி அரசியல் பகை உணர்வாக உள்ளது. இதனை மக்களும், தொண்டர்களும் பார்த்து கொண்டுள்ளனர். அனைவரும் தினகரன் பக்கம்தான் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

உண்மைJan 30, 2018 - 06:10:13 PM | Posted IP 122.1*****

உண்மைதான் சொல்லுகிறார்

சாமிJan 30, 2018 - 03:35:38 PM | Posted IP 45.11*****

அய்யய்யோ ....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape TailorsJoseph Marketing

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory