» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும்: ரஜினியின் அரசியல் குறித்து ராதாரவி விமர்சனம்!!

சனி 27, ஜனவரி 2018 10:40:21 AM (IST)

யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கட்டும். ஆனால் தமிழகத்தை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று நடிகர் ராதாரவி கூறினார். 

திருவாரூரில் நடிகர் ராதாரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாஜக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க குறுக்கு வழியில் செயல்படுகிறது. தமிழகத்துக்கு அவமரியாதை என்றால் தமிழர்கள்தான் கேட்க வேண்டும். மொழியை காப்பாற்ற யாரால் முடியாதோ அவர்களால் கலாசாரத்தையும் காப்பாற்ற முடியாது. ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது நல்லது. இதுவரை வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சென்று நடித்து வந்துள்ளனர்.

தமிழகத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளட்டும். ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பதற்கு பல வழிகளில் தேடியும் விடை கிடைக்கவில்லை. இதுகுறித்து யாரிடமாவது கேட்கலாம் என்று உள்ளேன். ரஜினி நல்லவர்களை கொண்டுதான் அரசியல் நடத்துவேன் என தெரிவித்துள்ளார். ஒருவேளை புத்தர், மகாவீரர் போன்றவர்களை அழைத்து வந்து அரசியல் நடத்துவார் என நினைக்கிறேன். விஷால் மிகவும் நல்லவர். ஆர்.கே.நகரில் 1,500 ஓட்டு என நினைத்து போட்டியிட சென்றுள்ளார். அவருக்கு கையெழுத்து போடுவதற்கு 10 பேர் கூட உடனில்லை என்பது வேதனைக்குரியது. அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்யிதில்லை.

கமல் நாளை நமதே என பிரசாரப் பயணத்தை தொடங்கி உள்ளார். அவரது ஊரையே அவர் பார்த்ததில்லை. எனவே, அவரது ஊரை முதலில் பார்க்க வேண்டும்.அங்குள்ள மக்களைச் சந்திக்க வேண்டும். தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராக தமிழன் மட்டுமே இருக்க வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமர் பதவியைப் பிறப்பால் இந்தியர்கள் மட்டுமே வகிக்க முடியும். அதேபோல், பிறப்பால் தமிழர்கள் மட்டுமே தமிழகத்தை ஆள வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

New Shape Tailors


Johnson's EngineersThoothukudi Business Directory