» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன்: நடிகர் கமல்ஹாசன் உறுதி!!

திங்கள் 22, ஜனவரி 2018 12:46:36 PM (IST)

"என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன்; இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும்" என நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தினை பிப்ரவரி 21ம் தேதி தொடங்குகிறேன் என அறிவிப்பு வெளியிட்டார்.  அவர் பிறந்த ராமநாதபுரத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார். ஆரம்பக்கட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்துள்ள விளக்கத்தில், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன.  அவரை போல பல கனவுகள் கொண்டவன் நான்.  விமர்சிப்பது மட்டும் என் வேலையன்று.  நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல.  அது நாடு தழுவியது.  மிகப்பெரிய சரித்திரமும், ஆந்த்ரோபாலஜியும் தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வேளச்சேரியில் நடந்த ஒரு விழாவில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன். இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும். அதற்கான பயணம் அடுத்த மாதம் தொடங்குகிறது. அப்போது பல சகோதரர்கள் கிடைப்பார்கள். கல்வி, சுகாதாரம், மருத் துவம், போக்குவரத்து ஆகி யவை சரி இல்லை. கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் செய் யவே வந்துள்ளேன்.நாம் உலகத்தின் முன்னோடி ஆகும் காலம் வெகுதொலைவில் இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Nalam PasumaiyagamBlack Forest Cakes

Anbu Communications


CSC Computer Education

Joseph MarketingThoothukudi Business Directory