» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தனிக்கட்சி திட்டம் இல்லை.. கட்சியையும் ஆட்சியையும் மீட்பேன்: டிடிவி தினகரன் பேட்டி

புதன் 17, ஜனவரி 2018 3:42:37 PM (IST)

தான் தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்றும், அதிமுகவையும் ஆட்சியையும் மீட்பதே தனது திட்டம் என்றும் டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.

கோவையில் நேற்று பேட்டியளித்த தினகரன், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்தும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். இதனை அடுத்து தினகரன் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், அதை எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டி.டி.வி தினகரன் இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி கோத்தகிரியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அதன் பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு தனிக்கட்சி ஆரம்பிக்கு எண்ணம் அறவே இல்லை. அதிமுக கட்சியையும், இரட்டை இலையையும் மீட்பது குறித்து தொடர்ந்து மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருகிறேன். அதிமுக துணைப் பொதுச் செயலாளர் என்கிற முறையில் வழக்கை நடத்தி நீதிமன்றம் உதவியுடன் விரைவில் அதை மீட்போம்.

எம்.ஜி.ஆர் மறைவின் போதும் இதே போல கட்சி மற்றும் ஆட்சி குறித்து சிக்கல் எழுந்த போது, ஜெயலலிதா தனியாக வேறு சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு அதிமுக கட்சியையும், ஆட்சியையும் மீட்டெடுத்தார். அதுபோன்ற நிலையே தற்போது தங்களுக்கும் ஏற்பட்டு உள்ளது. அவரை போலவே நாங்களும் கட்சியை மீட்போம். வருகிற உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு நாங்களும் கட்சியையும் ஆட்சியையும் மீட்டெடுப்போம். அதிமுகவை துரோகிகளிடம் இருந்து கைப்பற்ற நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals





New Shape Tailors




Thoothukudi Business Directory