» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மாநகராட்சி மேயரை மக்களே நேரடியாக தேர்வு செய்வதற்கான மசோதா: சட்டப்பேரவையில் தாக்கல்

வியாழன் 11, ஜனவரி 2018 3:13:00 PM (IST)

மாநகராட்சி மேயரை மக்களே நேரடியாக தேர்வு செய்வதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர்களை நேரடியாக தேர்வு செய்யும் நடைமுறை ஏற்கனவே இருந்து வந்தது. இதற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், தலைவரை தேர்ந்தெடுக்க வகை செய்யும் மசோதா, கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

எனினும், அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், மாநகராட்சி மேயரை நேரடியாக மக்களை தேர்வு செய்யும் பொருட்டு விதிகளில் மாற்றம் செய்யவதற்கான புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களையும் மக்களே நேரடியாக தேர்வு செய்வர்.  இந்த  மசோதாவை, அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

New Shape Tailors



Friends Track CALL TAXI & CAB (P) LTD




Joseph Marketing



Thoothukudi Business Directory