» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜெ. வீடியோ பற்றி பேச ஆனந்தராஜ் என்ன விஞ்ஞானியா?- தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி

வெள்ளி 29, டிசம்பர் 2017 5:51:44 PM (IST)

ஜெயலலிதா வீடியோ குறித்து கேள்வி எழுப்ப நடிகர் ஆனந்தராஜ் என்ன விஞ்ஞானியா? என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பினார்.

சென்னை அடையாறு தினகரன் இல்லம் முன்பு பேட்டி அளித்த தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது: எங்கள் பதவியே பறிபோனாலும் பரவாயில்லை என்று துணிச்சலோடு வந்து தினகரனை ஆதரித்தோம். எட்டு மாதம் ஆகிவிட்டது. ஆனால் இப்போது இடைத்தேர்தலை காரணம் காட்டி நீக்குவது வேடிக்கையாக உள்ளது. தைரியமிருந்தால் எங்களையும் நீக்குங்கள். இன்னும் சவால் விடுகிறேன். 18 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கிப்பாருங்கள் என்று சவால் விடுகிறேன். உங்களுக்குத்தான் அந்த அதிகாரம் இருக்கிறதே. 

ஒன்று செய்யுங்கள் குறிப்பிட்ட ஆறேழு அமைச்சர்களை விட்டுவிட்டு ஒன்றரை கோடி தொண்டர்களை நீக்கி விடுங்கள். ஏனென்றால் அனைவரும் தினகரன் பக்கம் உள்ளனர். இன்று தினகரன் வருவதைப் பார்த்து அனைத்து அமைச்சர்களும் ஊட்டிக்கு போய் விட்டார்களாம். இன்றே கோட்டை காலி ஆகிவிட்டது. எங்கள் முதல் கோரிக்கையாக ஆர்.கே.நகர் மக்களுக்கு குடிநீர், தெருவிளக்கு, 55 ஆயிரம் பேருக்கு வீடு உள்ளிட்டவை இருக்கும். இப்போது நாங்கள் எம்.எல்.ஏக்களாக இருக்கிறோமா இல்லையா என்பதே தெரியவில்லை. தொகுதி நிதியை ரத்து செய்துவிட்டார்கள் இதனால் தொகுதியில் செயல்பட முடியவில்லை. உடனடியாக 9-ம் தேதி இது குறித்த வழக்கில் விசாரித்து நல்ல தீர்ப்பு சொன்னால் தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது பற்றி மாற்றுக்கருத்து சொல்ல முடியாது. காலங்கடந்த முடிவு ரொம்ப லேட்.. டூலேட்.. அதுதான் என் நிலைப்பாடு. விஷால் நல்ல கோரிக்கை வைத்துள்ளார். தினகரன் தொகுதி மேம்பாட்டு நிதி வரும்போது செய்து கொடுப்பார். அமைச்சர்கள் கண்டபடி பேசுகிறார்கள். எவ்வளவு குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதை அவர்களது முன்னுக்கு பின் முரணான பேச்சில் வெளிவருகிறது. இதனால்தான் ஜெயலலிதா இவர்களை பேச விடாமல் வைத்திருந்தார். ஆரம்பத்தில் டெல்லியில் காவடி தூக்கினீர்கள், மத்திய அரசோடு இணக்கமாக இருக்கிறோம் மாநில நலன்களுக்கு நல்லது என்றீர்கள்.

இப்போது மதவாதம் பற்றி பேசுகிறீர்கள், பாஜகவுடன் கூட்டு இல்லை என்கிறீர்கள், இதை மக்கள் நம்புவார்களா? செல்லூர் ராஜு தெர்மோகோல் விவகாரம் எல்லோருக்கும் தெரியும் அவர் பேச்சை யாரும் முக்கியமாக எடுப்பதில்லை. அமைச்சர் ஜெயக்குமார் தோல்வியை நியாயமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அதுதான் பெரிய மனிதருக்கு அழகு. டெபாசிட்டே கிடைக்காது என்றீர்கள். தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார் என்பதை நிரூபித்துக்கொண்டு இருக்கிறோம். அரசாங்கம், போலீஸ், துணை ராணுவம் எல்லாம் ஆதரவாக இருந்தும் தோற்றுப்போய் விட்டு இப்பவும் அதையே பேசினால் எப்படி.

ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி மூலம் உண்மையான அதிமுக எது என்பது நிரூபிக்கப்படும் என்றீர்கள் தோற்றுவிட்டீர்கள், இப்பவும் ஹீரோ வேஷம் கட்டினால் மக்கள் சிரிக்க மாட்டார்களா? நடிகர் ஆனந்தராஜ் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ பற்றி சந்தேகம் கிளப்ப அவர் என்ன விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவா, அவருக்கு இப்ப என்ன தேவை வந்தது. வேண்டுமானால் சோதித்து பார்த்துக்கொள்ளட்டும். அவர் எப்போதாவது போயஸ் தோட்டத்தை பார்த்தாரா? அவர் கருத்தை எல்லாம் யார் கேட்டது? இவ்வாறு தங்கத்தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored AdsJoseph Marketing


New Shape Tailors

crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory