» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி : திமுக உள்பட 57 பேர் டெபாசிட் காலி

ஞாயிறு 24, டிசம்பர் 2017 9:20:20 PM (IST)ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளரான டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.  திமுக, பாஜக உள்ளிட்ட 57 பேர் டெபாசிட்டை இழந்தனர்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவாகின. அவர்களில், 83 ஆயிரத்து 994 ஆண் வாக்காளர்களும், 92 ஆயிரத்து 867 பெண் வாக்காளர்களும், 24 மூன்றாம் பாலித்தனவரும் அடங்குவர். வாக்குப் பதிவு சதவீதத்தின் அடிப்படையில் இது 77.5 சதவீதமாகும்.

இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் இ.மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேச்சையாக டிடிவி தினகரன், பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக களம் இறங்கினர். இந்தத் தேர்தலில் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 59 பேர் போட்டியிட்டனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச. 24) காலை 8 மணிக்கு சென்னை கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் 14 இருக்கைகள் அமைத்து 18 முழுசுற்று மற்றும் ஒரு அரை சுற்று என மொத்தம் 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

சுற்றுகள் வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்த டிடிவி.தினகரன் 19வது சுற்றின் முடிவில் 89,013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றியை அடுத்து தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்பு வரை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுவந்துள்ளது என்ற வரலாற்றை சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்றும், 40,707 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 91-ஆம் ஆண்டிக்குப் பிறகு ஆளும் கட்சிகளின் சாதனை முறியடித்துள்ளார்.

வெற்றிச் சான்றிதழ் பெற்றார்

ஜெயலலிதா பெற்ற வாக்குவித்தியாசத்தை கடந்துள்ளார் தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாஜக உள்ளிட்ட 57 பேர் டெபாசிட்டை இழந்தனர். இதையடுத்து அவரது தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இந்நிலையில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெறுவதற்காக ராணி மேரி கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.

கல்லூரிக்கு சென்ற அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயரிடம் ஆர்கே நகரில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தினகரன் பெற்றார். அவருடன் முன்னாள் அமைச்சரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுமான பழனியப்பன், செந்தில் பாலாஜி, தங்க தமிழ் செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.ஆர்.கே.நகர் இடத்தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றதையடுத்து அதிமுகவின் பலம் 136-லிருந்து 135-ஆகக் குறைந்துள்ளது.  சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வென்றதை அடுத்து தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

crescentopticalsNew Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing


Thoothukudi Business Directory