» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி வரி அமைப்புக்குள் கொண்டு வர மத்திய அரசு ஆதரவு: அருண் ஜெட்லி

செவ்வாய் 19, டிசம்பர் 2017 5:36:52 PM (IST)

பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி வரி அமைப்புக்குள் கொண்டு வரப்படுமா? என மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

பெட்ரோலிய பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டு வர மத்திய அரசு, விரும்புவதாகவும், எனினும் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே, இத்தகைய முடிவை மத்திய அரசு எடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் எம்.பி, கேள்வி ஒன்றை முன்வைத்தார். அதாவது, பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவது பற்றி மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவை, ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கிறது. எனினும் பெட்ரோலிய பொருட்களுக்கு பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு விகிதங்களில் மதிப்புக்கூட்டு வரி வசூலிக்கப்படுகிறது. எனவே இவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுடன் மட்டுமே இதை செயல்படுத்த முடியும். அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsJoseph MarketingFriends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


New Shape TailorsThoothukudi Business Directory