» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

2019ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலிலும் மோடிக்கே ஓட்டளிப்போம்: 79 சதவீத மக்கள் ஆதரவு

சனி 16, டிசம்பர் 2017 4:40:28 PM (IST)

2019ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலிலும் மோடிக்கே ஓட்டளிப்போம் என 79 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளால் மத்திய அரசு மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகளில், டைம்ஸ் குழுமத்தின் 10 ஊடக அமைப்புக்கள் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தி உள்ளன. இதில், இன்று லோக்சபா தேர்தல் நடத்தினால் நீங்கள் யாருக்கு ஓட்டளிப்பீர்கள் என கேட்கப்பட்டது.

இதில், 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான அரசுக்கே ஓட்டளிக்க போவதாக 79 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 12 முதல் 15 வரை மூன்று பாகங்களாக ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த கருத்துகணிப்பில் ஏறக்குறைய 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஓட்டளித்துள்ளனர். கருத்துகணிப்பு முடிவுகளின்படி, மோடிக்கு போட்டியாக காங்., கட்சி ராகுலை நிறுத்தினால் காங்.,க்கு ஓட்டளிப்போம் என 20 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ராகுல் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு 58 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

புதிய வாக்காளர்களை ராகுல் கவர்வார் என 34 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் கட்சியின் தலைவராக பதவி ஏற்றாலும் பா.ஜ.,விற்கு மாற்றாக காங்.,கை ஏற்ற தயாராக இல்லை என 73 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்.,ன் தலைவரானாலும் அக்கட்சிக்கு ஓட்டளிக்க தயாராக இல்லை என 38 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மோடி, பிரதமர் வேட்பாளராக இல்லை என்றால் பா.ஜ.,விற்கு ஓட்டளிக்க மாட்டோம் என 31 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

உண்மைDec 18, 2017 - 05:52:37 PM | Posted IP 122.1*****

உலகை ஆளும் சிவனே போற்றி! ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

crescentopticals

Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory