» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கட்சியின் பெயர், மற்றும் கொள்கைகள் விரைவில் வெளியிடப்படும்: கமல்ஹாசன் அறிவிப்பு

ஞாயிறு 26, நவம்பர் 2017 10:01:39 AM (IST)

எனது அரசியல் கட்சியின் பெயர், அதன் முக்கிய கொள்கைகள் என்னென்ன என்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என நடிகர் கமல்ஹாசன் கூறினார். 

டெல்லியில் டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் மூலம் சிறப்பு விவாத மேடை நிகழ்ச்சி ஒன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்கள், நட்சத்திர பிரபலங்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவர் விவாத மேடை நிகழ்ச்சியில் கூறியதாவது:முதலில் நான் ஒரு நடிகனாக இருந்தாலும் இப்போது ஆரம்பித்து இருக்கும் எனது அரசியல் வாழ்க்கைக்கு இயந்திரமாக மக்கள் மட்டுமே உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்து வருகின்றனர். சத்தியாகிரகம் என்ற வார்த்தையை இதுவரை யாரும் பின்பற்றியதாக தெரியவில்லை.  

நமது நாட்டை பொறுத்தவரையில் ஊழல் மட்டுமே அதிகளவில் மலிந்து கிடக்கிறது. அதனை துடைப்பதற்காகவே நான் தற்போது அரசியல் களத்திற்கு வந்துள்ளேன். அதில் முதல் கட்டமாக என மாநிலமான தமிழகத்தில் இருக்கும் ஊழலை துடைத்து விட்டு தேசிய அளவில் வர முயற்சி செய்கிறேன். இதற்கு மக்கள் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறேன். அதனால் அவர்களின் அடிப்படை பிரச்னைகள் ,கனவுகளை நிறைவேற்றுவதே எனது கனவாக அமையும். நான் ஊழல் செய்வதாக சிலர் கூறி வருகிறார்கள். எனக்கு ஒன்றும் சுவிஸ் வங்கியில் கணக்கு கிடையாது என்று பேசினார்.

இதையடுத்து எப்போது கட்சி ஆரம்பிக்க போகிறீர்கள் என பத்திரிகையாளர் கேள்விக்கு,” எனது அரசியல் கட்சியின் பெயர், அதன் முக்கிய கொள்கைகள் என்னென்ன என்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். மேலும் நான் பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டிணி வைக்க மாட்டேன் என்று கூறவில்லை. கூட்டணி வைப்பேன் ஆனால் அவர்களின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு அல்ல முழுக்க முழுக்க தமிழக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு. பத்மாவதி படத்திற்கு அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் சாயம் பூசப்பட்டுள்ளது. இதேப்போல் என படமான ஹேராம் படத்தின் சுவரொட்டிகளை பார்த்தே மத சாயம் பூசப்பட்டு படத்தை நிறுத்தினார்கள் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Adsselvam aqua

Universal Tiles Bazar

Johnson's Engineers

New Shape Tailors

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory