» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மழை உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி

வெள்ளி 3, நவம்பர் 2017 8:58:36 AM (IST)

மழை வெள்ள உயிர் இழப்புகளுக்கு முதல்–அமைச்சரே பொறுப்பு; உடனடியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வடசென்னைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். 

இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஓட்டேரியில் உள்ள கால்வாய் தூர்ந்து போய், ஆகாய தாமரைகள் முளைத்து, பாழ்பட்டு, அதனால் இந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பாக, இந்த தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் இப்பகுதி தி.மு.க. நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு தந்திருக்கிறார்கள்.

அப்படி புகார் கொடுத்தவுடன் அவர்கள் முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது மழை நீர் இப்பகுதியில் தேங்காத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், இன்றைக்கு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மின்துறை அமைச்சர் சில தினங்களுக்கு முன்பாக, மின்தடை எங்கும் ஏற்படாது, எந்த இடத்திலும் மின்கசிவு ஏற்படாது, அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் முன்கூட்டியே எடுத்திருக்கிறோம், என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், அப்படி எந்தவொரு முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. அதனால், பல இடங்களில் மின்கசிவு ஏற்பட்டு அதனால் உயிர்இழப்புகளும் தொடர்கின்றன.

சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கும் போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். எனவே, மழையால் ஏற்பட்டுள்ள உயிர்இழப்புகளுக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொள்வதுடன், உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும். இதையெல்லாம் அவரால் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக அவர் ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals





Johnson's Engineers




Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory