» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஆதார் கட்டாயம் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் : சுப்ரமணியன் சுவாமி நம்பிக்கை!

செவ்வாய் 31, அக்டோபர் 2017 4:40:07 PM (IST)

ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக அறிவித்துள்ளது. முதலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இறுதித் தேதி டிசம்பர் 31 என மத்திய அரசு கெடு விதித்திருந்தது. தற்பொழுது அந்த கெடுவானது அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் பொழுது மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

நலத்திட்டங்களுக்கான மானியம் வங்கி கணக்குகள் மூலம் செலுத்தப்படுவதால் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறும் மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவினை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இன்று காலை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: அரசின் திட்டங்களுக்கு ஆதாரைக் கட்டாயமாக்குவது என்பது தேசப் பாதுகாப்புக்கு எவ்வாறு ஆபத்து விளைவிக்கும் என்பது குறித்துப் பிரதமர் மோடிக்கு நான் ஒரு கடிதம் எழுதப் போகிறேன். உச்ச நீதிமன்றமும் இந்த உத்தரவினை ரத்து செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsNew Shape Tailors


crescentopticals

Johnson's Engineers

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory