» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பிரதமர் பெயர் தெரியாத தமிழக அமைச்சர் சீனிவாசன் : சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனார்.

ஞாயிறு 29, அக்டோபர் 2017 6:44:59 PM (IST)

திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பிரதமர் மோடிக்கு பதிலாக மன்மோகன் பெயரை உச்சரித்தார். ஒரு அமைச்சரே இவ்வாறு பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதிமுக துவக்கப்பட்டதன் 46வது ஆண்டு விழா கொண்டாட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடந்தது. 

இந்த கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் பேசிய விவரம் வருமாறு: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவ துவங்கியதும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை டில்லிக்கு அனுப்பி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க சொன்னார். தமிழகத்தில் கடுமையான கொசு வந்துள்ளது. மக்களிடம் பரவாமல் இருக்க வழி வகை செய்வதற்காக எய்ம்ஸ் டாக்டர் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இதனையடுத்து எய்ம்ஸ் குழு தமிழகம வந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

மன்மோகன் சிங் பிரதமர் பதவியை இழந்து மூன்று வருடங்கள் ஆகியும், பன்னீர்செல்வம் , பிரதமர் மோடியை சந்தித்தார் என சொல்வதற்கு பதில், மன்மோகன் சிங் எனக்கூறியது கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அமைச்சரின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த அமைச்சர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில்; ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது பார்த்தோம் என பொய் தான் சொன்னோம். சத்தியமா நாங்க பார்க்கலை என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDNew Shape Tailorscrescentopticals


Joseph MarketingThoothukudi Business Directory