» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஹார்வர்ட் பல்கலை தமிழ் இருக்கைக்கு 10 கோடி ஒதுக்கீடு : முதல்வர் ஈபிஎஸ் அறிக்கை

வெள்ளி 27, அக்டோபர் 2017 7:04:59 PM (IST)

ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி அளிக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளி யிட்டி ருக்கும் அறிக்கையில், தமிழ் மொழி தொன்மை வாய்ந்தது. திராவிட மொழிகளுக்குத் தாய் மொழி யாக விளங்குவது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. முன் னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ றிஞர்களின் நலனுக்காகவும் ஜெய லலிதாவின் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் அமெரிக்க வாழ் தமிழர்கள் அமெரிக்காவில் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழிருக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர். அதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி அளிக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தெரிவி த்துள்ளார். மேலும்  இந்த இருக்கையை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மொழியின் வளம் உலகறிய செய்ய வழிவகை ஏற்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticalsJoseph Marketing

New Shape Tailors
Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory