» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

எனது தேசபக்தியை பொது இடங்களில் நிரூபிக்கச் சொல்லி சோதிக்காதீர்கள்: கமல்ஹாசன்

புதன் 25, அக்டோபர் 2017 12:22:45 PM (IST)

பொதுஇடங்களில் எனது தேசபக்தியை நிரூபிக்கச் சொல்லி சோதிக்காதீர்கள் என கமல் தெரிவித்திருக்கிறார்.

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் அந்நாட்டு தேசியகீதம் இசைக்கப்படுகிறது. அதேபோல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நமது தேசியகீதத்தை ஒளிபரப்பலாம்.  எனது தேசபக்தியை பொது இடங்களில் நிரூபிக்க கட்டாயப்படுத்தி பரிசோதிக்காதீர்கள். விவாதங்களில் சிங்கப்பூரைப் பற்றி பலரும் உதாரணம் பேசுகின்றனர். சிங்கப்பூரில் இருப்பது கருணைமிக்க சர்வாதிகாரமே என்பதே சில விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. நமக்கும் அதுபோன்ற சூழல் வேண்டுமா? வேண்டாமே! இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.


மக்கள் கருத்து

உண்மைOct 25, 2017 - 05:31:50 PM | Posted IP 122.1*****

இவன் சொல்ற பொது இடம் வேற! பன்னாடை!

சாமிOct 25, 2017 - 01:02:07 PM | Posted IP 59.89*****

இவர் = மெண்டல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Johnson's Engineers




crescentopticals



New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory