» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: விஜயகாந்த் பேட்டி

சனி 7, அக்டோபர் 2017 11:48:46 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றதையடுத்து, அவரை சந்தித்து பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண, ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்துள்ளேன். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. 

எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளேன். சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவிற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படாததால் கலந்துகொள்ளவில்லை. ரஜினி, கமல் அரசியல் குறித்து என்னிடம் கேட்காதீர்கள். அரசியலுக்கு வந்துவிட்ட என்னை பற்றி ரஜினி, கமலிடம் கேளுங்கள். சிவாஜியும், கமலும் திரைப்படங்களில் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இணைந்ததை பார்க்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Johnson's Engineers


New Shape Tailors



crescentopticals



Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory