» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நான் வேலை கேட்டு விண்ணப்பமிட்டிருந்தால், ஜெட்லி முதல் இடத்தில் இருக்க முடியாது: சின்ஹா பதிலடி

வெள்ளி 29, செப்டம்பர் 2017 10:34:04 AM (IST)

நான் வேலை கேட்டு விண்ணப்பமிட்டிருந்தால், அருண் ஜெட்லி முதல் இடத்தில் அமர்ந்து இருக்க முடியாது என யஷ்வந்த் சின்ஹா பதிலடி கொடுத்துள்ளார். 

யஷ்வந்த் சின்கா 1990–களில் அப்போதைய பிரதமர்கள் சந்திரசேகர் மற்றும் வாஜ்பாய் ஆகியோரது தலைமையிலான மந்திரிசபையில், நிதி மந்திரியாக பதவி வகித்த பாரதீய ஜனதா மூத்த தலைவரான யஷ்வந்த் சின்கா, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் ‘நான் இப்போது பேச வேண்டும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், நாட்டின் பொருளாதார நிலையில் நிலவும் குளறுபடிகளை மேற்கோள்காட்டி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை கடுமையாக விமர்சித்தார். 

இதனை நான் இப்போது பேசவில்லை என்றால், தேசிய கடமையில் இருந்து தவறிவிட்டதாக அர்த்தமாகி விடும் என்றும் குறிப்பிட்டார். மத்திய அரசின் மீதான அவரது விமர்சனம் பா.ஜனதாவில் புயலை கிளப்பி இருக்கிறது. அவருடைய விமர்சனத்தை வரவேற்று உள்ள காங்கிரஸ் மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசின் மீது கேள்வி கணைகளை தொடுத்து வருகிறது. இப்போது  பொருளாதாரம் தொடர்பாக ‘யஷ்வந்த் சின்ஹாவின் குற்றச்சாட்டு தவறு என்றால், நிரூபித்து காட்டுங்கள்’ மத்திய அரசுக்கு பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா சவால் விடுத்து உள்ளது. 

யஷ்வந்த் சின்ஹாவின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:– யஷ்வந்த் சின்ஹாவுக்கு முன்னாள் மத்திய நிதி மந்திரியாக இருப்பது சவுகரியமாக இல்லை போலும். இப்படி குற்றச்சாட்டு சொல்வதன் மூலம், அவர் 80 வயதில் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார். அவர் நிதி மந்திரியாக இருந்தபோது 15 சதவீத வாராக்கடன் இருந்தது உள்ளிட்ட ‘சாதனைகளை’ மறந்து விட்டார். கொள்கைகளை விட்டுவிட்டு மனிதர்களை விமர்சிக்க தொடங்கி விட்டார். யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன் கைகோர்த்து செயல்படுகிறார். ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டதை இருவருமே மறந்து விட்டார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
யஷ்வந்த் சின்ஹா பதிலடி

‘80 வயதில் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்’ என்ற அருண் ஜெட்லியின் பேச்சுக்கு யஷ்வந்த் சின்ஹா பதிலடி கொடுக்கையில், "நான் வேலை கேட்டு விண்ணப்பமிட்டிருந்தால், அவர் (அருண் ஜெட்லி) அங்கு முதல் இடத்தில் அமர்ந்து இருக்க முடியாது,” என கூறிஉள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors




crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory