» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தனிப்பட்ட முறையில் நான் குறி வைக்கப்பட்டேன். : கமல்ஹாசன்

திங்கள் 31, ஜூலை 2017 10:59:06 AM (IST)

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் நான் வருவது என்பது எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை பொறுத்தே அமையும் என்று நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதுகுறித்து தந்தி டிவிக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி: எனது விமர்சனம் பொதுவானது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தனிப்பட்ட முறையில் நான் குறி வைக்கப்பட்டேன். அது ஏன் என்பது இதுவரை தெரியவில்லை.

நான் புதிதாக அரசியல் பேசவில்லை. எதையும் மனதில் வைத்துக் கொண்டு குறை கூறவில்லை. மனதில் பட்டதை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாடு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதில் பொது மக்களில் ஒருவன் என்ற முறையில் எனக்கும் அக்கறை உண்டு. கருத்து சொல்ல உரிமை உண்டு. அது பற்றி யார் விமர்சித்தாலும் கவலை இல்லை. ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன்.

நமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை. நிபுணரை தேடுகிறார்கள். பொதுப் பணி துறை என்றால் பொறுப்பான என்ஜினீயர் அதற்கு தலைமை ஏற்க வேண்டும். சுகாதார துறை என்றால் சிறந்த மருத்துவர் தான் அந்த துறைக்கு பொறுப்பு உடையவராக இருக்க வேண்டும். நான் ஒரு நடிப்பு பயிற்சி கல்லூரி தொடங்கினால் அது சிறப்பாக இருக்கும் காரணம் எனக்கு நடிப்பு பற்றி தெரியும். இது போல் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் உள்ளவர்கள் அமைச்சராக இருந்தால் நாட்டுக்கு நல்லது கிடைக்கும். படிக்காதவராக இருந்தாலும் காமராஜர் அற்புதமான மனிதர். தனி திறமை உள்ளவராக இருந்தார்.

சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்களும் படிக்கவில்லை. என்றாலும் அவர்கள் எதில் இருந்தார்களோ அதில் தங்கள் திறமையை நிரூபித்தார்கள். இன்று அது போன்ற தலைவர்கள் இல்லை. எனவே தலைவர்களை தேடாமல் நிபுணர்கள் தேவை என்று தான் மக்கள் கருதுகிறார்கள். நான் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. வர வைத்துவிடாதீர்கள். அரசியலுக்கும் வந்து பார்த்துவிடுவோம் என்ற எண்ணத்துக்கு இன்னும் நான் வரவில்லை. அது நடைமுறைகளையும், சூழலையும், எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தையும் பொறுத்தது. இவ்வாறு கமல்ஹாசன் தான் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

PeterAug 4, 2017 - 10:06:50 AM | Posted IP 103.3*****

அம்மாள் எந்த அம்மாள் குற்றவாளி அம்மாள்

சாமிJul 31, 2017 - 04:33:36 PM | Posted IP 160.2*****

உன்னை காப்பாற்றியதே அம்மாதான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors

Joseph Marketing



crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory