» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தையே மத்திய அரசிடம் அடகு வைத்திருப்பது தெளிவாக தெரிகிறது : மு.க. ஸ்டாலின் சாடல்

செவ்வாய் 16, மே 2017 5:16:25 PM (IST)

மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்தியிருப்பதன் மூலம், தமிழகத்தையே மத்திய அரசிடம் அடகு வைத்திருப்பது தெளிவாக தெரிகின்றது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துளளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவை சிறப்பாக கொண்டாடுவது, உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட வலியுறுத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை 60 ஆண்டுகால வைர விழாவையொட்டி அதற்கு பாராட்டு சொல்லக்கூடிய வகையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நியாயமாக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்து பின்னர் மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெற்று அதற்கு நிதி ஒதுக்கி இருக்கக்கூடிய வகையில் அவை முறையாக நடைபெற்றிருக்க வேண்டும். 

ஆனால், இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி ஆட்சி தற்போதுள்ள சூழலில் சட்டப்பேரவையை கூட்டினால், ஒருவேளை தொடர்ந்து ஆட்சி இருக்குமா என்கிற ஒரு சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல தலைவர் கருணாநிதியின் 60 ஆண்டுகால சட்டப்பேரவை சிறப்புகளைப் பற்றி சட்டப்பேரவையிலே எங்களைப் போன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைவருடைய பெருமைகளை, சிறப்புகளைப் பேசி, அவையிலே அது பதிவாகிவிட கூடாது என்கிற நயவஞ்சகத்தோடு, ஒரு சிறுதுளி கூட அரசியல் நாகரீகம் இல்லாமல் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவதற்கு முன்வராமல் வேண்டுமென்றே முடித்து வைக்கும் நிலையில் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசகர் ராவுக்கு முறையாக விளக்கமாக இதுபற்றியெல்லாம் கடிதம் எழுதி, உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும், நாட்டில் உருவாகியிருக்கும் குடிநீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலை, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு போன்ற பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்பட வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கிறோம். விரைவில் அதற்கான பதில் வரும் என்று நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ஒருவேளை முறையான பதில் வரவில்லையெனில் மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம் என்றார்.

மேலும், மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் இன்றைக்கு ரெய்டு நடத்தப்பட்டிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர். சிபிஐ போன்ற அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என நான் ஏற்கனவே  தெரிவித்த குற்றச்சாட்டை தான் மீண்டும் வழிமொழிகிறேன். எது எப்படி இருந்தாலும், ஏற்கனவே நிதித்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இதனை சட்டரீதியாக சந்திப்பார்.

கலைஞரின் வைர விழா நிகழ்ச்சி ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று அல்லது நாளைக்குள் விழா ஏற்பாடுகள் முழுமைபெற இருக்கிறது. சோனியா காந்தி வருகிறாரா அல்லது ராகுல்காந்தி வருகிறார என்பது மாலைக்குள் தெரியும். தெரிந்த பிறகு முறையாக உங்களுக்கு அறிவிக்கப்படும். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்தியிருப்பது, மாநில சுயாட்சிக்கு விரோதமான செயல் இது. இதிலிருந்து, இந்த ஆட்சி மத்திய அரசுக்கு எவ்வாறு அஞ்சி செயல்படுகிறது என்பது தெரிகின்றது. ஏன், தமிழகத்தையே மத்திய அரசிடம் அடகு வைத்திருப்பது தெளிவாக தெரிகின்றது என அவர் தெரிவித்தார்.
 


மக்கள் கருத்து

சாமிமே 17, 2017 - 10:03:19 AM | Posted IP 117.2*****

செயல்படாத ஒருவர் செயல் தலைவர் - விளங்கும் - அது சரி - அது என்ன அடகு மேட்டர் - காவிரி, முல்லை பெரியார், கச்சத்தீவை இதை எல்லாம் வசசீன்களே அதுவா .....

சுடாலின்மே 16, 2017 - 05:27:40 PM | Posted IP 125.1*****

மந்தமாக செயல் படும் dmk சுறுசுறுப்பாக செயல் பட அஞ்சாநெஞ்சன் தலைமை தாங்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers

Pop Up Here




Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar

New Shape Tailors

selvam aqua

Black Forest Cakes


CSC Computer Education



Thoothukudi Business Directory