» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கட்சிக்காக நிதி அமைச்சர் பதவியை ஓபிஎஸ்-க்கு விட்டு தர தயார்: ஜெயக்குமார்

ஞாயிறு 23, ஏப்ரல் 2017 7:19:09 PM (IST)

கட்சிக்காக நிதி அமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு விட்டுக் கொடுப்பேன் என்று ஜெயக்குமார் உருக்கமாக பேசியுள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சேத்துப்பட்டு ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேத்துப்பட்டு ஏரி மொத்தம் 17 ஏக்கர் நிலம். இந்த பகுதி மக்கள் பயன்படுத்தாத வகையில் இருந்தது. ரூ. 43 கோடியில் மக்கள் பயன்பாட்டிற்கு சுற்றுலாத்தலமாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் சேத்துப்பட்டு ஏரி மேம்படுத்தப்பட்டது. இதனால், தற்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி 2,000 முதல் 3,000 ஆயிரம் பேர் வருகின்றனர். மாதத்துக்கு 12,000 பேர் வருகின்றனர்.

இரண்டாம் கட்டமாக, ரூ. 6 ஆயிரம் கோடி செலவில் விர்சுவல் ரியாலிட்டி தியேட்டர் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் சேத்துப்பட்டு ஏரி மற்றும் மீனவர்கள் நடவடிக்கைகளை காண முடியும். மாணவர்களுக்கு கடல் வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த கடல்வாழ் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.அதில் அரிய வகை மீன்கள் வளர்க்கப்படும். மேலும், பொது மக்களின் கருத்துகளை கேட்டு,அவர்களுக்கு தேவையானவை செய்யப்படும்.

17 ஆண்டுகள் தி.மு.க, மத்தியில் கூட்டணி இருந்தது. அப்போது, எதுவுமே செய்யாமல், இப்போது அ.தி.மு.க-வை குற்றம் சாட்டுவது சரியில்லை. அ.தி.மு.க ஆட்சி கவிழும் என்று தி.மு.க பகல் கனவு காண்கிறது. ஆறு மாதம் இல்லை அறுபது ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது. நாங்கள்தான் ஆட்சியில் இருப்போம்.

கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் அணியினர் நாளை கூட வந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். அவர்கள் வருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. கோரிக்கைகள் இருப்பது நியாயம்தான். திறந்த மனதுடன் அதை பேசுவதன் மூலம் சரி செய்ய முடியும். கட்சி, ஆட்சி நலனுக்காக, எனது நிதி அமைச்சர் பதவியை, பன்னீர்செல்வத்துக்கு விட்டுக் கொடுக்க தயாராக உள்ளேன். அனைத்து எம்.எல்.ஏ-களுக்கும் அம்மாவின் சிறப்பான ஆட்சி தொடர வேண்டும் என்பதே விருப்பம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Panchai Dairy

Johnson's Engineers

New Shape Tailors

Nalam Pasumaiyagam

CSC Computer Education


Black Forest Cakes

selvam aqua









Thoothukudi Business Directory