» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜூலை மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்

வியாழன் 13, ஏப்ரல் 2017 3:57:33 PM (IST)

ஜூலை மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த தயார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தலை வரும் மே 14 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் உள்ளாட்சி தேர்தலை மே 14 ஆம் தேதிக்குள் நடத்துவது இயலாது என்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மே 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் அவர்கள் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் "வரும் ஜூலை மாத இறுதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எனவே உள்ளாட்சித் தேர்தலை நடத்த, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Pop Up Here



selvam aqua

New Shape Tailors


Black Forest Cakes


CSC Computer Education

Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam


Johnson's Engineers



Thoothukudi Business Directory