» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுக வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: முத்தரசன் குற்றச்சாட்டு

திங்கள் 10, ஏப்ரல் 2017 5:11:27 PM (IST)

திமுக வெற்றி பெறும் என கருத்து கணிப்பு வெளியானதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

மன்னார்குடியில் இன்று  அவர் அளித்த பேட்டி: ஆர்கே நகரில் நடைபெறவிருந்த இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் திடீரென ரத்து செய்திருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். அண்மையில் நடைப்பெற்ற கருத்து கணிப்பில் ஆர்கே நகரில் தேர்தல் நடைபெற்றால் திமுக வெற்றி பெறும் என்கிற கருத்து வெளியிடப்பட்ட சூழலில் பண பட்டுவாடாவை காரணமாக கூறி தேர்தலை ரத்து செய்திருப்பது ஏற்புடையது அல்ல. 

ஏனென்றால் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஆனாலும், சட்டமன்ற தேர்தலானாலும் இடைத் தேர்தலாக இருந்தாலும் பண பட்டுவாடா என்பது சில அரசியல் கட்சிகளால் நேரடியாக நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும்.கடந்த சட்டமன்ற தேர்தலின்ேபாது பண பட்டுவாடாவை காரணம் காண்பித்து தஞ்சாவூர் அரவக்குறிச்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அங்கு தேர்தல் நடைபெற்றது. இப்போது தேர்தல் ஆணையம் ஆர்கே நகரில் தேர்தலை ரத்து செய்திருக்கிறது. மீண்டும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் போது பண பட்டுவாடா இல்லாமல் தேர்தல் நடத்த முடியும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. 

ஐனநாயக முறைப்படி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் பாரதிய ஜனதா எத்தகைய அரசியலை விரும்புகிறதோ அந்த அரசியல் தான் இன்று நடந்திருக்கிறது என்ற உண்மையை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது. தேர்தல் ஆணையத்தின் இடைத் தேர்தல் ரத்து நடவடிக்கை ஐனநாயகத்தை சீரழிக்க கூடியது. ஐனநாயக படுகொலையை தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது. அதற்கு பாரதிய ஜனதா துணை போயிருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது என்றார். 


மக்கள் கருத்து

சாமிApr 12, 2017 - 02:51:26 PM | Posted IP 61.1.*****

திமுக வெற்றியா - அதெல்லாம் அப்பவே முடிஞ்சு போச்சு

பாலாஜிApr 11, 2017 - 03:24:33 PM | Posted IP 175.1*****

இவரு என்ன தான் சொல்ல வராரு. ஜனநாயக படி நடக்கலேன்னு சொல்லறாரு.. அப்புறம் தேர்தல் ரத்து தப்புனு சொல்லறாரு. அப்ப்பா முடியல. எது பேசினாலும் உடனே பிஜேபி குறை சொல்றது. சரிப்பா பிஜேபி அரசியல் பண்ணுது.. நீ பேசுறத பர்தா. வெட்டி பய statement மாதுரி தெரியுதே. எப்பா இன்னும் tea வரல.......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Pop Up Here


Johnson's Engineers


Universal Tiles Bazar

New Shape Tailors

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

selvam aqua




Thoothukudi Business Directory