» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்து தேர்தல் ஆணையம் உத்தரவு : அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

திங்கள் 10, ஏப்ரல் 2017 9:52:35 AM (IST)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், வருகின்ற 12-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது. இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, வருமானவரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனை, சுமார் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில்... விஜய பாஸ்கரின் வீடுகள், அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். மேலும், வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது தொடர்பான ஆவணங்கள் என்று சொல்லப்படுபவை வெளியாகின. அந்த ஆவணத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அவர்கள் மூலமாக ஒரு வாக்காளருக்கு 4,000 ரூபாய் வரை வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியைப் பாகம் பாகமாகப் பிரித்து, 85 சதவிகித வாக்களர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி 89 கோடி ரூபாய் வரை செலவிட கணக்கிட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து

saamyApr 10, 2017 - 01:51:24 PM | Posted IP 59.89*****

இது பிஜேபி தலைகளின் சித்து விளையாட்டு - தொப்பிதான் வெல்லும் - தாமரைக்கு டெபாசிட் கூட கிடைக்காது - என்பது தெளிவாக தெரிந்ததின் விளைவு இது

M.sundaramApr 10, 2017 - 11:45:14 AM | Posted IP 117.2*****

Kudos to the EC

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Pop Up Here

selvam aqua

CSC Computer Education




Johnson's Engineers

Universal Tiles Bazar


New Shape Tailors

Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory