» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பணப்பட்டுவாடாவுக்கு போலீஸ் அதிகாரிகள் துணை போகின்றனர்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

புதன் 5, ஏப்ரல் 2017 6:22:18 PM (IST)

பணப்பட்டுவாடாவுக்கு துணை போவதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தாமரை கண்ணன் மற்றும் ஜெயக்குமார் மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.

12 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஆர்.கே நகர் தேர்தலை முன்னிட்டு தினமும் பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வருகின்றன. முதலில் சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் மாற்றபட்டார்.தொடர்ந்து ஆர் கே நகரை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். பணப்பட்டு வாடா செய்தது சம்பந்தமாக திமுக அதிமுக அம்மா அணி இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. 

இதில் திமுக தொண்டர்கள் அடிபட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் பணப்பட்டு வாடாவுக்கு துணை போவதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தாமரை கண்ணன் மற்றும் ஜெயக்குமார் மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.இ தனிடையே இடைத்தேர்தல் அன்று ஆர்.கே.நகர் தொகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், 99405 99465 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அளிக்கலாம் என சென்னை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors



selvam aqua

Sterlite Industries (I) Ltd


CSC Computer Education

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar

Johnson's Engineers




Thoothukudi Business Directory