» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உள்ளாட்சித் தேர்தலை கண்டு எங்கள் அணிக்கு பயமில்லை : வைகைக் செல்வன் பேட்டி

செவ்வாய் 4, ஏப்ரல் 2017 7:10:25 PM (IST)

தற்போதுள்ள சூழலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் ஆளும்கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் அவர்கள் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை என்ற திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டை அதிமுக அம்மா அணியின் வைகைச் செல்வன் மறுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சித் தேர்தலை ஆளுங்கட்சியினர் சந்திக்க தயாராக இல்லை என கூறியிருந்தார்.இதனை அதிமுக அம்மா அணியின் வைகைச் செல்வன் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியபோது, 

2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அனைத்து மாநகராட்சிகள் உள்பட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. எனவே உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் அதிமுக அம்மா அணிக்கு இல்லை என மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையத்தில் பல்வேறு சிக்கல்கள் இருக்கலாம். அது அவர்களின் நிலைப்பாடு. தேர்தலுக்கு அரசு எப்போதுமே அஞ்சியது கிடையாது எனக் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads






New Shape Tailors

Johnson's Engineers




crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory