» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னத்தை தவறாக பயன்படுத்தவில்லை: ஓபிஎஸ் அணியினர் விளக்கம்

திங்கள் 3, ஏப்ரல் 2017 10:44:15 AM (IST)ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னத்தை தவறாக பயன்படுத்தவில்லை என ஓபிஎஸ் அணியினர் விளக்கம் அளித்துள்ளனர்..

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சசிகலா அதிமுக, பன்னீர்செல்வம் அதிமுக என அதிமுக கட்சி பிளவு கண்டுள்ளதால், இந்த தொகுதியில் அதிமுக சசிகலா அணி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பில் அக்கட்சியின்  மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சிப் பெயரை முடக்கிய தேர்தல் ஆணையம், அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்படுமாறு சசிகலா தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளது. அவர்களுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல், அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் செயல்படுமாறு பன்னீர்செல்வம் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அவர்களுக்கு இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இரு தரப்பினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி தரப்பு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மின்கம்பம் சின்னத்தை இரட்டை இலை போல் தவறாக சித்தரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக அதிமுக அம்மா தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், அதிமுக அம்மா அணி(டிடிவி தினகரன்) அளித்த புகார் அடிப்படையில் மதுசூதனனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீஸ்க்கு வரும் ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

இதனையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மின்கம்பம் சின்னத்தை தவறாக பயன்படுத்தவில்லை என மதுசூதனன் விளக்கம் அளித்து உள்ளார். தினகரன்தான் இரட்டை இலை சின்னத்தை பரப்புரைக்கு தவறாக பயன்படுத்துகிறார், அதிமுக கட்சியையும் தனது பிரசாரத்திற்கு முறைகேடாக பயன்படுத்துகிறார் என குற்றம் சாட்டிஉள்ள மதுசூதனன் தேர்தல் ஆணையத்திடம் நேரில் வந்து விளக்கம் அளிக்கவும் தயார் என கூறிஉள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

selvam aquaCSC Computer Education

Black Forest Cakes

Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

New Shape Tailors


Pop Up Here

Johnson's Engineers

Thoothukudi Business Directory