» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அரசியலில் மேட்ச்பிக்ஸிங் செய்கிறார் பன்னீர்செல்வம் : அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

சனி 1, ஏப்ரல் 2017 12:54:25 PM (IST)

அரசியலில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மேட்ச் பிக்ஸிங் செய்கிறார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை ஆர்.கே நகர் பிரசாரத்தில் பேசிய பன்னீர்செல்வம், ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்போ லோவில் சிகிச்சை பெற்று வந்த போது அவரை மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லு மாறு தாம் வலியுறுத்தியதை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்து விட்டதாக கூறியிருந்தார். 

இந்நிலையில் இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவை அமெரிக்கா கொண்டு சிகிச்சை அளிக்க நான் மறுத்துவிட்டதாக பன்னீர்செல்வம் கூறியதில் உண்மையில்லை.

அரசியலில் மேட்ச் பிக்ஸிங் செய்கிறார் பன்னீர்செல்வம். தொடர்ந்து பன்னீர்செல்வம் விரக்தியில் தவறான கருத்தை கூறி வருகிறார். பன்னீர்செல்வம் பதவியில் இருக்கும் போது ஏன் இதுபோன்ற சந்தேகங்கள், கேள்விகள் எழுப்பவில்லை என மக்களே கேட்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Pop Up Here


selvam aqua

New Shape Tailors



CSC Computer Education


Black Forest Cakes

Johnson's Engineers

Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory