» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சசிகலாவுக்கு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சமக தலைவர் சரத்குமார் வாழ்த்து

வியாழன் 29, டிசம்பர் 2016 1:53:27 PM (IST)

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில், அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர், அதனைத் தொடர்ந்து வழிநடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்குப் பின்னர் இன்று அதிமுகவின் பொது ச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.விகே சசிகலா அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

அதே போல் சசிகலாவுக்கு சமக தலைவர் சரத்குமார் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நேரடியாக இல்லை என்றாலும் அவருடைய 33 வருட அரசியல் பயணம் அனைவரும் அறிந்ததே என்றும் ஜெயலலிதாவை இழந்து தவிக்கும் நேரத்தில் சசிகலா கட்சியை சிறப்பாக வழி நடத்தி செல்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ச .ம .க வின் ஒரே தொண்டன்Dec 29, 2016 - 08:08:08 PM | Posted IP 122.1*****

சமத்துவ தலிவர் வாழ்த்திட்டார் அ.தி.மு.க.கண்டிப்பா விளங்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads








New Shape Tailors

crescentopticals


Johnson's Engineers

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory