» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நாடார் சமுதாயம் பற்றிய தவறான பாடப்பகுதி நீக்கம்: சரத்குமார் வரவேற்பு

வெள்ளி 23, டிசம்பர் 2016 8:54:37 AM (IST)

நாடார் சமுதாயம் பற்றி இழிவாக இடம்பெற்றிருந்த பாடப்பகுதி முற்றிலும் நீக்கப்பட்டதற்கு சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடார் சமுதாயம் பற்றி இழிவாக இடம்பெற்றிருந்த பாடப்பகுதி முற்றிலும் நீக்கப்படுவதாகவும், அதுபற்றி எந்த ஒரு வினாவும் தேர்வுக்கு கேட்கப்படாது என்றும், இதுபற்றி பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

இந்திய திருநாட்டில், எந்த ஒரு சாராரையும் தனிப்பட்ட முறையில் பாதிக்கும் அளவுக்கு எந்த ஒரு பாடத்திட்டமும், எக்காலத்துக்கும் அமைந்துவிடக்கூடாது. மேலும், இந்திய வரலாற்றையும், கலாசாரத்தையும் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் வகையிலும் உலகமே திரும்பி பார்க்கும் அளவிலும் இருக்கும்போது, இதுபோன்ற பாடத்திட்டங்களை எக்காலத்திலும் அனுமதிக்காத வகையில், இதனை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

நாடார்Dec 30, 2016 - 05:04:22 PM | Posted IP 117.2*****

இதை ஆரம்பத்துல சொன்னது ராமதாஸ் வன்னியர் தான். இந்த நாதாரி பய நாடார் பேரை சொல்லி ஏமாத்திட்டு நாடாரை அசிங்கப்படுத்திட்டு இருக்கான்

ச .ம .க வின் ஒரே தொண்டன்Dec 23, 2016 - 03:47:41 PM | Posted IP 122.1*****

சமுத்துவ தலீவா நீதான் நாடாரின் காவலன் வாழ்க சின்னம்மா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

crescentopticals



Friends Track CALL TAXI & CAB (P) LTD





Joseph Marketing



Thoothukudi Business Directory