» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மோடி ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

வியாழன் 22, டிசம்பர் 2016 11:52:33 AM (IST)

மோடி ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்று பாஜக‌ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடந்துள்ளது பற்றி பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது: முந்தைய காலங்களில் யாராலும் அணுகவே முடியாதவர்கள் என்ற எழுதப்படாத விதி இருந்தது. ஆனால் மோடியின் ஆட்சியில் அந்த விதி மாற்றப்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் கண்காணிக்கப்படுவார்கள். தவறு செய்பவர்கள் தப்பிக்கவே முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை வேறு. இது வேறு என்று எடுத்துக்கொள்ள கூடாது.  என் பணத்தை எடுக்க நான் வரிசையில் நிற்க வேண்டுமா? என்று சாதாரண மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைதான் சுருட்டி, பதுக்கி வைத்திருக்கிறார்கள். கள்ளப்பணமும், கணக்கில் காட்டாத பணமும் மோடி மட்டும் இவ்வளவு தீவிரமாக இறங்கி இருக்காவிட்டால் இப்படித்தான் பதுக்கப்பட்டு கொண்டே இருக்கும். வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய்க்காக மக்கள் அலைகிறார்கள். ஆனால் லட்சக்கணக்கானவர்களுக்கு வழங்கக் கூடிய கோடிக்கணக்கான பணத்தை சிலர் மூட்டை கட்டி வைத்திருக்கிறார்கள். 

அதைத்தான் மத்திய அரசு கண்டுபிடித்து பறித்து வருகிறது.பிடிக்கப்படும் புதிய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் உடனடியாக வங்கிகள் மூலம் புழக்கத்துக்கு விடப்படுகிறது. தமிழ்நாட்டில்தான் பதுக்கலும், கள்ளச்சந்தையும் அதிகம். பெரும்புள்ளிகளை பொறி வைத்து பிடிப்பது சாதாரண வி‌ஷயமல்ல. பல விமர்சனங்களை தாண்டி வர வேண்டும். அந்த துணிச்சலுடன் மோடி செயல்படுகிறார். பா.ஜனதா ஆட்சி நடக்காத மாநிலங்களில் மட்டுமே சோதனை நடப்பதாக திருமாவளவன் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த மாநிலங்களில் ஊழல் தலைமையும் இல்லை. ஊழல் தலைமை செயலாளரும் இல்லை என்று தான் கருத வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors



crescentopticals

Johnson's Engineers







Thoothukudi Business Directory