» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜெயலலிதா போலவே அசராமல் பதிலளித்து அசத்திய தீபா.. அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..!!

செவ்வாய் 20, டிசம்பர் 2016 10:42:52 AM (IST)

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தந்தி டிவிக்கு அளித்த பேட்டி அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெயலலிதாவை போல எந்த கேள்விக்கும் அசராமல் அவர் பதிலளித்து அசத்திய விதம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை தலைமை ஏற்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது. இந்நிலையில் தீபாவின் பேட்டியை தந்தி டிவி ஒளிபரப்பியது. வழக்கமாக தந்தி டிவியின் ஒருங்கிணைப்பாளர் பாண்டே பேட்டியெடுக்கும் தலைவர்களை மடக்கியே பிரபலமானவர். ஆனால் தீபாவுடனான பேட்டியில் பாண்டேவின் அத்தனை கேள்விகளுக்கு உடனடியா எந்த தாமதமும் இல்லாமல் பதிலடி கொடுத்தார் தீபா.

தீபாவும் ஒரு பத்திரிகையாளர் என்பதால் பாண்டேவுக்கு உடனுக்கு உடன் பதிலடி தந்தார். தீபாவின் இந்த ஸ்டைல் அவரது அத்தை ஜெயலலிதாவை அப்படியே பிரதிபலிக்கிறது என உற்சாகத்துடன் இருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். பாண்டேவால் கடைசிவரை தீபாவை மடக்கவே முடியாமல் போனதும் அதிமுகவினரின் உற்சாகத்துக்கு மற்றொரு காரணம், மறைந்த ஜெயலலிதாவின் அச்சு அசல் போலவே தோற்றத்திலும் பேச்சிலும் அவரது அண்ணன் மகள் தீபா தோற்றமளிப்பது அதிமுக தொண்டர்களை உற்சாகத்திலும் ஆச்சரியத்திலும் மூழ்க வைத்துள்ளது.

அரசியலில் குதிக்க விரும்புகிறேன் - தீபா

பேட்டியின் இறுதியில் இது நமது அத்தையின் கட்சி, எனவே அதன் தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா என்று ரங்கராஜ் பாண்டே கேட்டார். அதற்கு தீபா பதிலளிக்கையில், நான் அதிமுகவில் உறுப்பினர் இல்லை. ஆனாலும் அதில் ஈடுபாடு இருந்தது. அத்தை உயிருடன் இருந்தபோதே கூட நான் அதில் இணைய விரும்பினேன். ஆனால் அது முடியவில்லை.

அத்தை சிறையில் அடைக்கப்பட்டபோது கூட நான் அரசியலுக்குவர வேண்டும் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். அத்தை தனது கட்சிக்காக பல போராட்டங்களை சந்தித்தவர். போராடியவர். அதற்காக பாடுபட்டவர். அதைக் காக்க வேண்டும் என்ற நிலை வந்தால், அரசியலில் நான் ஈடுபடவேண்டும் என்ற நிலை வந்தால் அந்த முடிவை எடுப்பேன் என்று தீபா கூறினார் .இனி ஜெயலலிதாவின் ஒரே வாரிசு; அதிமுகவின் ஒரே தலைவி ஜெ. தீபா என்ற குரல் வலுக்கவே செய்யும்!


மக்கள் கருத்து

சக்தி நாகைJan 3, 2017 - 08:54:48 PM | Posted IP 107.1*****

திபாவுக்கு வாழ்த்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD





crescentopticals

Johnson's Engineers





Thoothukudi Business Directory