» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பிளஸ் டூ தேர்வில் நாசரேத் சாலமோன் பள்ளி சாதனை
புதன் 10, மே 2023 7:36:33 PM (IST)

பிளஸ் டூ தேர்வில் நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், நாசரேத்தில் பிளஸ் டூ தேர்வில் சாலமோன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பயின்ற எமினா ஷெர்லின் 600 க்கு 586 மதிப்பெண்களுடன் மூன்று பாடங்களில் 100% பெற்று முதல் இடத்தையும், பொன் செல்சியா 576 மதிப்பெண்களுடன் இரண்டு பாடங்களில் 100% மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், ஃபாத்திமா சுமையா 540 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்,
இவர்களை பள்ளி தாளாளரும் நகர திமுக செயலாளருமான ஜமீன் சாலமோன், பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ், துணை முதல்வர் பியூலா ஜாய்ஸ் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர், மேலும் பள்ளி தாளாளர் சாதனை மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார், முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஜோயல் ராஜ்குமார் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புள்ளிவிவர பகுப்பாய்வு பயிற்சி!
புதன் 27, செப்டம்பர் 2023 5:29:37 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தொழில்முனைவோர் பயிற்சி பட்டறை!
புதன் 27, செப்டம்பர் 2023 4:36:39 PM (IST)

நாசரேத் சமுதாய கல்லூரியில் பரிசளிப்பு விழா!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:32:41 PM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:27:49 PM (IST)

போலி விளம்பரங்கள் குறித்த விழிப்புணர்வு: மரியன்னை கல்லூரியில் கருத்தரங்கம்!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 10:20:14 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் சமூக மேம்பாட்டுத் திட்டப் பணிகள்!
சனி 23, செப்டம்பர் 2023 3:18:49 PM (IST)
