» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
விளாத்திகுளத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 20, மார்ச் 2023 9:42:57 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
2010 ஆம் ஆண்டு முதல் மாா்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வைத்து விளாத்திகுளம் வனத்துறை சார்பில் வனச்சரக அலுவலர் கவின் உத்தரவின் போில் சிட்டுக்குருவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி சிறப்பு உரையாற்றினார். வனவர் நாகராஜ் சிட்டுக்குருவி பறவை இனத்தின் பாதுகாப்பு பற்றியும் சுற்றுச்சூழல் சம நிலையில் சிட்டுக்குருவியின் பங்களிப்பு பற்றியும் மாணவர்களிடம் எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் வனக்காவலர்கள் ஜெயபால்,ராமசாமி உட்பட மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா: கனிமொழி வழங்கினார்!
சனி 27, மே 2023 10:26:32 AM (IST)

தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
வெள்ளி 26, மே 2023 11:40:15 AM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா
திங்கள் 22, மே 2023 11:59:38 AM (IST)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.5 சதவீதம் தேர்ச்சி!
சனி 20, மே 2023 10:58:32 AM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் செவிலியர் தினவிழா
திங்கள் 15, மே 2023 3:46:49 PM (IST)

பிளஸ் டூ தேர்வில் நாசரேத் சாலமோன் பள்ளி சாதனை
புதன் 10, மே 2023 7:36:33 PM (IST)
