» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அரசு பள்ளியில் முதல்முறையாக பிளஸ் 2 தேர்வு மையம்: மாணவர்கள் உற்சாகம்!

செவ்வாய் 14, மார்ச் 2023 12:27:56 PM (IST)



கொம்மடிக்கோட்டை பள்ளியில் நடப்பாண்டு முதல் அரசு தேர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து முதல் முறையாக 12 ஆம் வகுப்பு அரசு தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்கு பழைய மாணவர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு இனிப்பு மற்றும் பைல் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை சு. சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. 50 ஆண்டுகள் பழமையான இப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மாணவ, மாணவர்கள்கல்வி படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இருந்து 10, 11, 12 வகுப்புக்கான அரசு தேர்வு எழுத 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உடன்குடி, சாத்தான்குளம், பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று அரசு தேர்வை எழுதி வந்தனர். இதையடுத்து இந்த பள்ளிக்கு தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தினர். 

அதன்படி இந்த ஆண்டு முதல் இப்பள்ளியில் அரசு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி கொம்மடிக்கோட்டை சொக்கன்குடியிருப்பு பள்ளி மாணவ, மாணவர்கள் இந்தப் பள்ளியில்  12-ம் வகுப்பு அரசு தேர்வு முதல் முதலாக எழுத இந்தப் பள்ளிக்கு வருகை தந்தனர். தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக பைல் மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இப்பள்ளியில் பிளஸ்டூ தேர்வு 89 மாணவர்கள் அரசு தேர்வு எழுதினர். 

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மேந்திரராஜ், தமிழாசிரியர் பாலகிருஷ்ணன், ஓவிய ஆசிரியர் அசோக்குமார், சத்துணவு அமைப்பாளர் ஆனந்தராஜ், பழைய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த நடுவக்குறிச்சி தொழிலதிபர் ஆனந்த், சொக்கன்குடியிருப்பு கணபதி, கொம்மடிக்கோட்டை சுந்தர்ராஜ், லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory