» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பண்டாரவிளை பள்ளியில் உலக மகளிர் தினவிழா : புவனேஸ்வரி சண்முகநாதன் பங்கேற்பு
புதன் 8, மார்ச் 2023 5:37:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவளை இந்து நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ் புவனேஸ்வரி சண்முகநாதன் பேசினார்.
விழாவில் அவர் பேசுகையில், 20ம் நூற்றாண்டிற்கு முன்கூலி தொழிலாளியாக இருந்த பெண்கள் ஐரோப்பிய நாடுகளில் தங்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று பெண்கள் போராட்டங்களை நடத்தினர். வெற்றிபெற முடியவில்லை. 1917ம் ஆண்டில் 8ந் தேதி அமைதிக்கான போராட்டம் நடந்தது. 1975ம் ஆண்டு ஐ.நா.சபை பெண்கள் ஆண்டு அறிவித்தது. 1977 ல் மார்ச் 8 ந் தேதி உலக முழுவதும் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.கருவில் இருக்கும் பெண் சிசுவை கல்லி பால் கொண்டு அழித்த கொடுமை தமிழக உசிலம்பட்டியில் நடந்தது.
இந்தியாவில் முதன்முதலாக பெண் சிசுவை காப்பாற்ற தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டுவந்து, அன்னை தெரசாவில் அன்பை பெற்றவர் அம்மா ஒருவர்தான். தாயின் இன்சியலை குழந்தைக்கு முகவரியாக தந்து பெண்ணின் பெருமையை போற்றியவர் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா ஒருவர்தான்.வேலை செய்யும் பெண்கள் நலன்கருதி விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் அம்மாவழங்கினார்.
அரசு வேலை செய்யும் கர்ப்பிணி பெண்கள் குழந்தையை வளர்க்க 6 மாதம் சம்பளத்துடன் விடுமுறை தந்ததோடு, ஓராண்டாக மாற்றியவர் அம்மாதான். பெண்ணுக்கு தாலிக்கு 1 பவுன் தங்கம் வழங்கியதோடு, படித்த, பட்டதாரி பெண்களுக்கு ரூ 25 ஆயிரம், ரூ 50 ஆயிரம் வழங்கினார். கிராமபுறபெண்கள் சுயமாக வாழவேண்டும் என்பதற்காக 5 வெள்ளாடுகள் இலவசமாக வழங்கினார். இரண்டு பெண் குழந்தை பெற்றால் அந்த குழந்தை கள்பெயரில் தலா ரூ25 ஆயிரம் வழங்கினார்.கர்ப்பிணி பெண் சிசுவை பாதுகாக்க இலவச மருத்துவ சேவை, சத்துமாவுகள் வழங்கப்பட்டன.
பெண்கள் ஆண்களுக்கு நிகராக உருவாகவும், உலகத்தை கையில் வைத்து தெரிந்துகொள்ளவும் விலையில்லா மடிக்கணினி வழங்கினார்.பாரதி கண்ட புதுமைப்பெண் புரட்சித் தலைவி அம்மா பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தந்தார். உலக மகளிர் தின விழாவில் பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி உருவாக்கிய அம்மாவை போற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார் இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் விஜயா கேத்சியால் புஷ்பவல்லி ஜெயா பௌர்ணகனி பங்கு பெற்றனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா: கனிமொழி வழங்கினார்!
சனி 27, மே 2023 10:26:32 AM (IST)

தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
வெள்ளி 26, மே 2023 11:40:15 AM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா
திங்கள் 22, மே 2023 11:59:38 AM (IST)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.5 சதவீதம் தேர்ச்சி!
சனி 20, மே 2023 10:58:32 AM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் செவிலியர் தினவிழா
திங்கள் 15, மே 2023 3:46:49 PM (IST)

பிளஸ் டூ தேர்வில் நாசரேத் சாலமோன் பள்ளி சாதனை
புதன் 10, மே 2023 7:36:33 PM (IST)
