» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி கீதா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
சனி 4, பிப்ரவரி 2023 4:25:03 PM (IST)

தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கீதா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளி 18-வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சப்- கலெக்டர் தாக்ரே சுபம் நியான்டாரோ தலைமை தாங்கி மாணவ -மாணவி களுக்கு அறிவுரை வழங்கினார். பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெஸிந்தா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், ஆசிரியர் களுக்கும் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அறிவுத்திறன் வளர்க்கும் வகையில் பேச்சு போட்டிகளும் நடைபெற்றன. விழாவில் சுதன்கீலர், சுதாசுதன், மகிழ்ஜான், கீர்த்தனா மகிழ், ராக்கேஷ், ஜீனா ஜீவன், உள்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 20, மார்ச் 2023 9:42:57 PM (IST)

அரசுப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்!
திங்கள் 20, மார்ச் 2023 8:07:30 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
சனி 18, மார்ச் 2023 7:28:49 AM (IST)

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் வினாடி வினா போட்டி
வெள்ளி 17, மார்ச் 2023 3:53:42 PM (IST)

புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாமிடம்!
வெள்ளி 17, மார்ச் 2023 3:16:23 PM (IST)

பிள்ளையன்மனை பள்ளியில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வியாழன் 16, மார்ச் 2023 3:21:41 PM (IST)
