» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா
வியாழன் 26, ஜனவரி 2023 11:21:23 AM (IST)

தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில்; 74-வது குடியரசு தினவிழாவிற்கு பள்ளியின் தாளாளரும், முதல்வருமான ஆ.ஜெயாசண்முகம் தலைமையில் சிறப்பு விருந்தினராக அரிமா வட்டாரத் தலைவரான லயன் பால சங்கரி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மேலும் லயன்ஸ் கிளப் சார்பாக செயலாளர் லயன் மனோன்மணி, பொருளாளர் லயன் அபிநயா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். அதன் பின் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு தேசியகீதத்துடன் விழா நிறைவுற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா: கனிமொழி வழங்கினார்!
சனி 27, மே 2023 10:26:32 AM (IST)

தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
வெள்ளி 26, மே 2023 11:40:15 AM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா
திங்கள் 22, மே 2023 11:59:38 AM (IST)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.5 சதவீதம் தேர்ச்சி!
சனி 20, மே 2023 10:58:32 AM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் செவிலியர் தினவிழா
திங்கள் 15, மே 2023 3:46:49 PM (IST)

பிளஸ் டூ தேர்வில் நாசரேத் சாலமோன் பள்ளி சாதனை
புதன் 10, மே 2023 7:36:33 PM (IST)
